Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Sunday, July 29, 2018

கானல் நீர் அவள்.. காற்றில் கரைந்தவள்

இருள் சுமக்கும் இரவின் பாரம் அவள்...
படுக்கைக்கும் தூக்கத்திற்கும் இடையில் நினைவுகள் அவள்...

என் மோகத்தின் முதல் புரிதல் அவள்....
என் தேகத்தின் முதல் ஸ்பரிசம் அவள்...
கருவிழி பார்வையில் என்னோடு
காதல் கொஞ்சி பேசியவள்....

காற்றின் மனம் என நிறைந்தவள்..
கானல் நீர் என மறைந்தவள்...
காதல் அளவாய் தந்தவள்...
காற்றில் மெல்ல கரைந்தவள்...

ஆண்டுபல கழித்து அவளை
காண நேர்ந்தால் என்ன நடக்கும்..

வார்த்தை உளறுமா..
நேரமும் உறையுமா...
நட்பைபோல் நம் காதல் விட்ட இடத்தில் தொடங்குமா
இல்லை இனி பிழைத்து என்ன பயன் என காதல் சாகுமா...

உன் கரம் பற்றிடுவேனா?
உன் நலம் விசாரிப்பேனா?
பழைய கதை பேசுவேனா?
நீ விட்டு சென்ற இடத்தின் வலி சொல்வேனா?
இல்லை அதை நிரப்பிய என் மனைவி மனம் சொல்வேனா?

நிச்சயம் என் மனைவி புகழ் தான் இசைப்பேன்...

நீ என் காதலி.. ஆனால் நான் இன்னோருத்தியின் கணவன்..
நீ என் சுகமான கடந்தகாலம்...
அவளுக்கு நான்தான் நிகழ்காலம்..
நீ நான் சுற்றிடும் சூரியன்.. அவள் என்னை மட்டுமே சுற்றிடும் நிலவு...

வான் புகையில் மறைந்த தேவதை நீ... எனக்காக வானில் இருந்து குதித்தவள் அவள்..
திசை காண்பித்த நட்சத்திரம் நீ..
என்னை செலுத்திடும் ஓடம் அவள்..
என் வாழ்க்கையில் குடிக்க முடியாத கடல் நீ...  என் கையில் இருக்கும் ஒரு கண்ணாடி கோப்பை தேநீர் அவள்...

உன்னை பிரிந்த இத்தனை வருடங்களில்.. உன்னை எண்ணி ஏங்கிய இரவுகள் உண்டு..
இருப்பினும்....
காதலி உன்னை மணந்திருத்தால்..
இதுபோல் நல்ல மனையாளை இழந்திருப்பேன் என்ற ஐயமும் என்னிடத்தில் உண்டு.. 

போதும் உன் நினைவு தரும் சுகங்கள்.. அவள் மடியில் அயர்ந்து நிச்சயம் உன் காதல் சிந்திப்பேன்...
அது போதும் எனக்கு...

Wednesday, July 4, 2018

தையர் புகழ் பாடீர்

தையர் புகழ் பாடீர்...
அந்த வைய புகழ் பாடீர்...
பேதை புகழ் பாடீர்...
அக்கோதை புகழ் பாடீர்...

காதல் என்ப அது வெறும் சொற்பம்..
பக்தி என்றே அதன் பெயர் நிற்கும்..
அவள் தேகம் என்றே மதி விக்கும்..
இல்லை பேதம் அவளே அனைத்திற்கும்..

உதிரத்தின் உறவோ அவள் செய்தது..
இல்லை,
வையகமே இங்கு அவள் படைத்தது..
ஈசன் பாத்திரமோ அவள் நிறைத்தது..
அவளே,
அன்னம் பூரணமாய் சரணம் என்றது..

கொடுப்பார் எல்லாம் பெண் பெயர் கொண்டது...
எடுப்பார் பிச்சை இதில் ஆண்(ண)வம் என்னது...
ஆலயம் இல்லா ஊர் நரகம் என்றது...
தெய்வம் தொலைத்தபின் ஆலயம் எங்கது..

மங்கையர் மதிக்காதார் மரமோ என்றது..
கல்லிலும் பெண்ணே கடவுள் ஆனது...
அங்கனை துயரம் கடவுள் உயிர் துளைக்கும் என காப்பியம் சொன்னது.. 
அதனை மறந்து ஆடும் மனிதா அமரமாதர் நோவு கேடினும் கொடியது...