Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Wednesday, November 6, 2019

மனிதமே மதமாய்

மனிதம் தொலைத்து...
மதம் பேணவோ...

கருணை தொலைத்து...
குருணை பேணவோ...

பொருள் தொலைத்து..
அருள் பேணவோ..

மதி தொலைத்து..
விதி பேணவோ...

ஒற்றுமை தொலைத்து..
பற்றுமை பேணவோ...

நித்தம் தொலைத்து தொலைத்து
நிலைத்தது ஏதுமில்லை...
சித்தம் சிதைத்து சிதைத்து..
சத்தியம் கூடவில்லை...

நம்மை காக்கும் இறைவனை 
நாம் காக்க இயலுமோ...
உண்மை மறக்கும் மனிதனை
சிவம் காக்க இயலுமோ...

கடலே ஆகினும் தாகம்
தணிக்க முடியுமோ..
மதமே ஆகினும் மனிதம்
மறக்க முடியுமோ...

கூரையின் வடிவம் ஏதாகினால்
என்ன? 
உள்ளிருக்கும் இறைவன் நாடுவது
அன்பைத்தானே!!

அன்பாய் தழுவி,
ஒன்றாய் கூடி,
சுயநலம் அற்று,
பிறர்நலம் பேணி,
கரம் சேர்த்து தொழுதால் 
அன்பால் குழையும் சிவனே!!!!


Monday, July 22, 2019

கொரிக்க

இறைவனின் தரிசனம்..
இரண்டு நொடியே..
இருண்ட மேகங்களில்
மின்னலாய்..!!

Thursday, July 18, 2019

ஏக்கம்

கானல் நீரே...
ஆறாம் விரலே..
எட்டா அறிவே...
புரியா கவியே...

உன்னை காண தவிக்கிறேன்..
நிதம் ஏங்கி துடிக்கிறேன்...
வரமாய் என் முன்னே வந்திடு..
பார்வைக்கு விருந்து தந்திடு...

பேசா மொழியே..
கோவில் சிலையே..
அமைதி கடலே...
இன்ப நகலே...

குரல் கேட்ட தவிக்கிறேன்...
குலாவி சிரிக்க அழைக்கிறேன்...
சிறு வார்த்தை உதிர்த்திடு...
மறுமொழிக்கு சிரித்திடு...

வான நிலவே...
தூர அழகே...
எட்டா கனியே..
உறையும் நொடியே...

கரம் கோர்க்க நினைக்கிறேன்..
மென்னடை பழக விழைகிறேன்..
என் சபரிசம் தீண்டிடு...
உலகம் என்னோடு நடந்திடு...

சிறு துயரமே...
குறு பாரமே...
சின்ன வலியே..
மெல்லிய வேதனையே...

உன்னை சும்மக்க நினைக்கிறேன்..
வாழ்வை ரசிக்க சுகிக்கிறேன்..
என்னோடு இன்றே வந்திடு...
இறுதி கணமும் என்னோடு இருந்திடு...

Wednesday, June 26, 2019

வரமல்லவோ!!!

வானம் பார்த்து நிற்கையில்..
மழை பெய்தது...
வரமல்லவோ...

தவித்து நின்ற போது..
குவளை தண்ணீர்...
வரமல்லவோ...

சுட்டுபொசுக்கும் சூரியன்..
பனைமர நிழல்...
வரமல்லவோ...

பசியில் யாசகம்...
பகிர்ந்த சோறு..
வரமல்லவோ..

தொலைந்த வாழ்க்கை..
சிறு நம்பிக்கை...
வரமல்லவோ...

வறண்ட கண்கள்..
பார்வையில் அவள்..
வரமல்லவோ...

உறைந்த உள்ளம்...
கதகதப்பான புன்னகை..
வரமல்லவோ...

வறண்ட நம்பிக்கை..
இறுதியாய் இறைவன்..
வரமல்லவோ!!!