Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Monday, August 13, 2018

அடி கனகாம்பரமே

அடி ஆதி பெண்ணே..
அடியே குல பெண்ணே...
சலங்கையில் சங்கிலிய கட்டிக்கிட்டு
அடுபங்கரை அமர்ந்தே பெண்ணே.
என் கனகாம்பரமே..

ஆண்மை என்பான்..
வலிமை என்பான்...
அத்தனையும் கட்டுக்கதை நம்பாதே அடி கனகாம்பரமே...

பெண்ணியம் என்றால் இதுவல்ல என்பான்...
தனக்கு பிடித்ததே கலாச்சாரம் என்பான்.. இவனை நம்பாதே
அடி கனகாம்பரமே...

கற்பு என்பான்... கடவுள் என்பான்..
நதியும் என்பான் நிலமும் என்பான்.. இந்த புகழ்ச்சியில் மயங்கதே அடி கனகாம்பரமே..

அடிப்பேன் என்பான் உதைப்பேன் என்பான்.. ஆசிட் என்பான்.. தற்கொலை என்பான்.. கலங்காதே அடி கனகாம்பரமே...

மோகினி என்பான்.. பரத்தை என்பான்.. வேசி என்பான்.. தாசி என்பான்.. துயராதே அடி கனகாம்பரமே..

கவர்ச்சி என்பான்.. காமம் என்பான்.. அத்தனைக்கும் அவள் தான் காரணம் என்பான்.. பதராதே அடி கனகாம்பரமே...

பருவம் என்பான்.. தீட்டு என்பான்..
மலடி என்பான்.. அடிமை என்பான்..
குழம்பாதே அடி கனகாம்பரமே...

அச்சம் என்பான் மடமை என்பான்..
நாணம் என்பான் குணம் என்பான்.. சொல்லாமல் உன்னை முட்டாள் என்பான்... சகிக்காதே அடி
கனகாம்பரமே...



Saturday, August 4, 2018

உன் விழியில் என் கனவுகள்

அகரம் பொல் எங்கள் ஆதி ஆனாய்..
எங்கள் அத்தனைக்கும் நீ வேர் ஆனாய்..
தக்க வயதில் என் தோழன் ஆனாய்..
தர்மனாய் துவண்டால் நீ எனக்கு கண்ணனும் ஆனாய்...
நேர்பட பேசி நிற்கையில் என் கண்ணுக்கு சில நேரம் நீ பாரதி ஆனாய்...

பாலகனாய் உன் விரல் பற்றி நடக்கையில் என் தகப்பன் வேகம் தொட நான் சற்றே ஓட வேண்டி வரும்...

நம் ஸ்கூட்டர் சவாரியின் போது நடந்து செல்லும் என் தோழனை நையாண்டியது நினைவில் வரும்..

பழக்கம் அறியா அன்னியர் மத்தியில் யாரோ வேலு அண்ணே என்ன சொல்லி ஓடி வந்தால் அது எனக்கு கர்வம் தரும்...

காகித காந்தி உறவு சேர்க்கும் பெற்றோர் மத்தியில் அறமும் அன்பும் சேர சுற்றம் சேர்த்தாயே அதுவே எனக்கு பெருமை தரும்..

தன் கனவை பிள்ளையின் மெல் திணிக்கும் கடும்கோளர்கள் மத்தியில் நீ மட்டும் ஏன் என் கனவுகளை உன் கண்ணில் சுமக்கிறாய்...

எப்படியும் வாழலாம் எனும் நரன்திண்ணிகள் மத்தியில் இப்படி வாழ்வதே அறம் என எப்படி சுகிக்கிறாய்...

என்ன தவம் செய்தால் மீண்டும் உன் மகனாய் நான் பிறக்கலாம்?
என்ன சுகம் செய்தால் என் தந்தைக்கு அது கைமாறாக இருக்கலாம்?

ஏதேனும் உன் புகழ் நிற்க இவ்வுலகில் பதில் செய்திடுவேன் அது மேல் நம்பிக்கை உண்டு என்னக்கு...

நல்ல அறிவும், நல்ல குணமும், தெளிந்த மதியும்.. கொஞ்சும் தமிழும் தந்தைக்கு என்றும் நன்றி சொல்வேன் உனக்கு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...

Sunday, July 29, 2018

கானல் நீர் அவள்.. காற்றில் கரைந்தவள்

இருள் சுமக்கும் இரவின் பாரம் அவள்...
படுக்கைக்கும் தூக்கத்திற்கும் இடையில் நினைவுகள் அவள்...

என் மோகத்தின் முதல் புரிதல் அவள்....
என் தேகத்தின் முதல் ஸ்பரிசம் அவள்...
கருவிழி பார்வையில் என்னோடு
காதல் கொஞ்சி பேசியவள்....

காற்றின் மனம் என நிறைந்தவள்..
கானல் நீர் என மறைந்தவள்...
காதல் அளவாய் தந்தவள்...
காற்றில் மெல்ல கரைந்தவள்...

ஆண்டுபல கழித்து அவளை
காண நேர்ந்தால் என்ன நடக்கும்..

வார்த்தை உளறுமா..
நேரமும் உறையுமா...
நட்பைபோல் நம் காதல் விட்ட இடத்தில் தொடங்குமா
இல்லை இனி பிழைத்து என்ன பயன் என காதல் சாகுமா...

உன் கரம் பற்றிடுவேனா?
உன் நலம் விசாரிப்பேனா?
பழைய கதை பேசுவேனா?
நீ விட்டு சென்ற இடத்தின் வலி சொல்வேனா?
இல்லை அதை நிரப்பிய என் மனைவி மனம் சொல்வேனா?

நிச்சயம் என் மனைவி புகழ் தான் இசைப்பேன்...

நீ என் காதலி.. ஆனால் நான் இன்னோருத்தியின் கணவன்..
நீ என் சுகமான கடந்தகாலம்...
அவளுக்கு நான்தான் நிகழ்காலம்..
நீ நான் சுற்றிடும் சூரியன்.. அவள் என்னை மட்டுமே சுற்றிடும் நிலவு...

வான் புகையில் மறைந்த தேவதை நீ... எனக்காக வானில் இருந்து குதித்தவள் அவள்..
திசை காண்பித்த நட்சத்திரம் நீ..
என்னை செலுத்திடும் ஓடம் அவள்..
என் வாழ்க்கையில் குடிக்க முடியாத கடல் நீ...  என் கையில் இருக்கும் ஒரு கண்ணாடி கோப்பை தேநீர் அவள்...

உன்னை பிரிந்த இத்தனை வருடங்களில்.. உன்னை எண்ணி ஏங்கிய இரவுகள் உண்டு..
இருப்பினும்....
காதலி உன்னை மணந்திருத்தால்..
இதுபோல் நல்ல மனையாளை இழந்திருப்பேன் என்ற ஐயமும் என்னிடத்தில் உண்டு.. 

போதும் உன் நினைவு தரும் சுகங்கள்.. அவள் மடியில் அயர்ந்து நிச்சயம் உன் காதல் சிந்திப்பேன்...
அது போதும் எனக்கு...

Wednesday, July 4, 2018

தையர் புகழ் பாடீர்

தையர் புகழ் பாடீர்...
அந்த வைய புகழ் பாடீர்...
பேதை புகழ் பாடீர்...
அக்கோதை புகழ் பாடீர்...

காதல் என்ப அது வெறும் சொற்பம்..
பக்தி என்றே அதன் பெயர் நிற்கும்..
அவள் தேகம் என்றே மதி விக்கும்..
இல்லை பேதம் அவளே அனைத்திற்கும்..

உதிரத்தின் உறவோ அவள் செய்தது..
இல்லை,
வையகமே இங்கு அவள் படைத்தது..
ஈசன் பாத்திரமோ அவள் நிறைத்தது..
அவளே,
அன்னம் பூரணமாய் சரணம் என்றது..

கொடுப்பார் எல்லாம் பெண் பெயர் கொண்டது...
எடுப்பார் பிச்சை இதில் ஆண்(ண)வம் என்னது...
ஆலயம் இல்லா ஊர் நரகம் என்றது...
தெய்வம் தொலைத்தபின் ஆலயம் எங்கது..

மங்கையர் மதிக்காதார் மரமோ என்றது..
கல்லிலும் பெண்ணே கடவுள் ஆனது...
அங்கனை துயரம் கடவுள் உயிர் துளைக்கும் என காப்பியம் சொன்னது.. 
அதனை மறந்து ஆடும் மனிதா அமரமாதர் நோவு கேடினும் கொடியது...

Tuesday, May 8, 2018

கவலை மாய்க்கும்

கண்ணே துளிர்க்காதே
கவலை மாய்த்திடும்...
நெஞ்சே பதராதே..
காலம் ஜெய்த்திடும்...

கண்ணீர் கொண்ட கண்கள் என்றும் தீயை சுமக்காது..
பதற்றம் கொண்ட நெஞ்சில்
என்றும் உறுதி நிலைக்காது...

தேகம் முதலில் தேரட்டும்...
மனம் உறுதியாய் மாறட்டும்...
வெற்றி என்ன பெரிய இலக்கு...
வெற்றியை தாண்டியும் வாழ்க்கை இருக்கு...

கண்ணே துளிர்க்காதே
கவலை மாய்த்திடும்...
நெஞ்சே பதராதே..
காலம் ஜெய்த்திடும்

உன்னுள்  நீ கேட்க ஊரான் செவி வேண்டாம்..
உன்னை நீ பார்க்க உலகம் விடிய வேண்டாம்...
பிறர் சொல் கவனிக்க நீ வாழவே வேண்டாம்..

உன் இதிகாசம் அதை நீ எழுதிடு..
ராமனோ ராவணனோ நீயே தேர்ந்தெடு...
புல்லும் விருட்சம் அறுக்கும் அதை நீ நம்பிடு..

கண்ணே துளிர்க்காதே
கவலை மாய்த்திடும்...
நெஞ்சே பதராதே..
காலம் ஜெய்த்திடும்