Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Friday, January 10, 2020

வள்ளியாச்சி பிறந்தநாள்

நான் செய்யும் நன்மையெல்லாம்
நீ சொன்ன பாடங்கள்...
நான் வாழும் நிமிடமெல்லாம்
நீ காட்டிய பாதைகள்...

வேதங்கள் சொல்லா விளக்கங்கள்
உன் அன்பில் அறிந்தேன்..
இறைவனில் இல்லா இன்பங்கள்
உன் கருணையில் அறிந்தேன்..

பிள்ளையே ஆகினும் தவறிழைத்தால்
நீ சகித்ததில்லை...
தொல்லையே ஆகினும் ஆழ்மனதால்
நீ வெறுத்ததில்லை..

கோவங்கள் கொண்டாலும் நீ
குணம் தொலைத்ததில்லை...
தேகமே நொந்தாலும் நீ
முகம் சுளித்ததில்லை....

காலம் இமைக்க தவறினாலும்..
காற்று மிதக்க தவறினாலும்..
நீ உன் நெறியில் தவறியதில்லை...

அன்னமிடுகையில்
அன்னபூரணி நீ...
ஆட்சிபுரிகையில்
அன்னை மீனாட்சி நீ..
அன்பு செய்கையில்
அகிலாண்டேஸ்வரி நீ.

உன் நலனில் எங்கள் நலன் நாடும்
ஒரு சுயநலவாதியாய்
வாழ்த்துகிறேன்
வாழ்க நீ வாழியவே..
வையகம் கூடி வாழியவே...
ஆழி வடியும் வரை வாழியவே....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்ன பெத்த மம்மி....

Wednesday, November 6, 2019

மனிதமே மதமாய்

மனிதம் தொலைத்து...
மதம் பேணவோ...

கருணை தொலைத்து...
குருணை பேணவோ...

பொருள் தொலைத்து..
அருள் பேணவோ..

மதி தொலைத்து..
விதி பேணவோ...

ஒற்றுமை தொலைத்து..
பற்றுமை பேணவோ...

நித்தம் தொலைத்து தொலைத்து
நிலைத்தது ஏதுமில்லை...
சித்தம் சிதைத்து சிதைத்து..
சத்தியம் கூடவில்லை...

நம்மை காக்கும் இறைவனை 
நாம் காக்க இயலுமோ...
உண்மை மறக்கும் மனிதனை
சிவம் காக்க இயலுமோ...

கடலே ஆகினும் தாகம்
தணிக்க முடியுமோ..
மதமே ஆகினும் மனிதம்
மறக்க முடியுமோ...

கூரையின் வடிவம் ஏதாகினால்
என்ன? 
உள்ளிருக்கும் இறைவன் நாடுவது
அன்பைத்தானே!!

அன்பாய் தழுவி,
ஒன்றாய் கூடி,
சுயநலம் அற்று,
பிறர்நலம் பேணி,
கரம் சேர்த்து தொழுதால் 
அன்பால் குழையும் சிவனே!!!!


Monday, July 22, 2019

கொரிக்க

இறைவனின் தரிசனம்..
இரண்டு நொடியே..
இருண்ட மேகங்களில்
மின்னலாய்..!!

Thursday, July 18, 2019

ஏக்கம்

கானல் நீரே...
ஆறாம் விரலே..
எட்டா அறிவே...
புரியா கவியே...

உன்னை காண தவிக்கிறேன்..
நிதம் ஏங்கி துடிக்கிறேன்...
வரமாய் என் முன்னே வந்திடு..
பார்வைக்கு விருந்து தந்திடு...

பேசா மொழியே..
கோவில் சிலையே..
அமைதி கடலே...
இன்ப நகலே...

குரல் கேட்ட தவிக்கிறேன்...
குலாவி சிரிக்க அழைக்கிறேன்...
சிறு வார்த்தை உதிர்த்திடு...
மறுமொழிக்கு சிரித்திடு...

வான நிலவே...
தூர அழகே...
எட்டா கனியே..
உறையும் நொடியே...

கரம் கோர்க்க நினைக்கிறேன்..
மென்னடை பழக விழைகிறேன்..
என் சபரிசம் தீண்டிடு...
உலகம் என்னோடு நடந்திடு...

சிறு துயரமே...
குறு பாரமே...
சின்ன வலியே..
மெல்லிய வேதனையே...

உன்னை சும்மக்க நினைக்கிறேன்..
வாழ்வை ரசிக்க சுகிக்கிறேன்..
என்னோடு இன்றே வந்திடு...
இறுதி கணமும் என்னோடு இருந்திடு...

Wednesday, June 26, 2019

வரமல்லவோ!!!

வானம் பார்த்து நிற்கையில்..
மழை பெய்தது...
வரமல்லவோ...

தவித்து நின்ற போது..
குவளை தண்ணீர்...
வரமல்லவோ...

சுட்டுபொசுக்கும் சூரியன்..
பனைமர நிழல்...
வரமல்லவோ...

பசியில் யாசகம்...
பகிர்ந்த சோறு..
வரமல்லவோ..

தொலைந்த வாழ்க்கை..
சிறு நம்பிக்கை...
வரமல்லவோ...

வறண்ட கண்கள்..
பார்வையில் அவள்..
வரமல்லவோ...

உறைந்த உள்ளம்...
கதகதப்பான புன்னகை..
வரமல்லவோ...

வறண்ட நம்பிக்கை..
இறுதியாய் இறைவன்..
வரமல்லவோ!!!

Monday, August 13, 2018

அடி கனகாம்பரமே

அடி ஆதி பெண்ணே..
அடியே குல பெண்ணே...
சலங்கையில் சங்கிலிய கட்டிக்கிட்டு
அடுபங்கரை அமர்ந்தே பெண்ணே.
என் கனகாம்பரமே..

ஆண்மை என்பான்..
வலிமை என்பான்...
அத்தனையும் கட்டுக்கதை நம்பாதே அடி கனகாம்பரமே...

பெண்ணியம் என்றால் இதுவல்ல என்பான்...
தனக்கு பிடித்ததே கலாச்சாரம் என்பான்.. இவனை நம்பாதே
அடி கனகாம்பரமே...

கற்பு என்பான்... கடவுள் என்பான்..
நதியும் என்பான் நிலமும் என்பான்.. இந்த புகழ்ச்சியில் மயங்கதே அடி கனகாம்பரமே..

அடிப்பேன் என்பான் உதைப்பேன் என்பான்.. ஆசிட் என்பான்.. தற்கொலை என்பான்.. கலங்காதே அடி கனகாம்பரமே...

மோகினி என்பான்.. பரத்தை என்பான்.. வேசி என்பான்.. தாசி என்பான்.. துயராதே அடி கனகாம்பரமே..

கவர்ச்சி என்பான்.. காமம் என்பான்.. அத்தனைக்கும் அவள் தான் காரணம் என்பான்.. பதராதே அடி கனகாம்பரமே...

பருவம் என்பான்.. தீட்டு என்பான்..
மலடி என்பான்.. அடிமை என்பான்..
குழம்பாதே அடி கனகாம்பரமே...

அச்சம் என்பான் மடமை என்பான்..
நாணம் என்பான் குணம் என்பான்.. சொல்லாமல் உன்னை முட்டாள் என்பான்... சகிக்காதே அடி
கனகாம்பரமே...



Saturday, August 4, 2018

உன் விழியில் என் கனவுகள்

அகரம் பொல் எங்கள் ஆதி ஆனாய்..
எங்கள் அத்தனைக்கும் நீ வேர் ஆனாய்..
தக்க வயதில் என் தோழன் ஆனாய்..
தர்மனாய் துவண்டால் நீ எனக்கு கண்ணனும் ஆனாய்...
நேர்பட பேசி நிற்கையில் என் கண்ணுக்கு சில நேரம் நீ பாரதி ஆனாய்...

பாலகனாய் உன் விரல் பற்றி நடக்கையில் என் தகப்பன் வேகம் தொட நான் சற்றே ஓட வேண்டி வரும்...

நம் ஸ்கூட்டர் சவாரியின் போது நடந்து செல்லும் என் தோழனை நையாண்டியது நினைவில் வரும்..

பழக்கம் அறியா அன்னியர் மத்தியில் யாரோ வேலு அண்ணே என்ன சொல்லி ஓடி வந்தால் அது எனக்கு கர்வம் தரும்...

காகித காந்தி உறவு சேர்க்கும் பெற்றோர் மத்தியில் அறமும் அன்பும் சேர சுற்றம் சேர்த்தாயே அதுவே எனக்கு பெருமை தரும்..

தன் கனவை பிள்ளையின் மெல் திணிக்கும் கடும்கோளர்கள் மத்தியில் நீ மட்டும் ஏன் என் கனவுகளை உன் கண்ணில் சுமக்கிறாய்...

எப்படியும் வாழலாம் எனும் நரன்திண்ணிகள் மத்தியில் இப்படி வாழ்வதே அறம் என எப்படி சுகிக்கிறாய்...

என்ன தவம் செய்தால் மீண்டும் உன் மகனாய் நான் பிறக்கலாம்?
என்ன சுகம் செய்தால் என் தந்தைக்கு அது கைமாறாக இருக்கலாம்?

ஏதேனும் உன் புகழ் நிற்க இவ்வுலகில் பதில் செய்திடுவேன் அது மேல் நம்பிக்கை உண்டு என்னக்கு...

நல்ல அறிவும், நல்ல குணமும், தெளிந்த மதியும்.. கொஞ்சும் தமிழும் தந்தைக்கு என்றும் நன்றி சொல்வேன் உனக்கு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...