Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Sunday, December 11, 2016

பாரதிக்கு என் பிறந்தநாள் கீர்த்தனை

நாவினில் ருசியில்லை.. செவிக்கு பசி யில்லை
நெஞ்சில் கொண்ட தாபம் இன்னும் அடங்கவில்லை..
துன்பம் தீரவில்லை.. கோபம் கொள்ளவில்லை..
இதை தீர்க்க போதையின்றி எனக்கு வழி ஏதுமில்லை...

கோப்பை மதுவோ
கொஞ்சும் இளங்கிளியோ
புகையோ.. பொடியோ.. கள்லோ.. கனலோ...காதலோ...
எத்தனை போதையிலும்.. நாட்டமில்லை.. நான் தேடிய போதை இன்னும் கிட்டவில்லை..

உள்ளம் திளைக்கும்...
என் உருகுலைக்கும்...
காதல் முளைக்கும்....
அப்படி ஒரு நல்ல போதை வேண்டும் எனக்கு..

தொட்டால் அனல் கொதிக்கும்..
பார்த்தால் பயம் நெறிக்கும்..
கேட்டால் உடல் சிலிர்க்கும்..
அத்துணை நல்ல போதை வேண்டும் எனக்கு..

எளிதில் கிடைக்கும்..
அரிதாய் இருக்கும்..
மாய உருவம் கொடுக்கும்
என் மதி கெடுக்கும் போதை வேண்டும் எனக்கு..

காதல் இருக்கும் அதில்
கோபமும் சுரக்கும்..
காமம் திளைக்கும்..மேலும்
பக்தியும் மணக்கும்..
விசித்திர போதை வேண்டும் எனக்கு..

சத்தினை உருக்கி..
எத்தனை பேருக்கும்
பித்தினை தெளிக்கும்
நித்தம் இனிக்கும் போதை வேண்டும் எனக்கு..

இத்தனை கொண்ட போதை தயாரிக்க
எத்துணை யுகம் கொள்ளுமோ எண்ணி ஏங்கி இளைத்து பின் திலைத்தேன்.. உன்னை போல் தன் மீசை முறுக்கி நிற்க்கும் நின் கவிகளை கண்டு..

அத்துணை ஜென்மத்திலும் உன் கவி குடித்து வாழ ஆசை.. எத்துணை ஜென்மம் தின்று தொலைக்குமோ உன் கவி குடிக்கும் என் பேராசை...

Wednesday, November 30, 2016

மழை - கட்டுரை வழி கவிதை

துவிதல் வானம்..
கருத்தரித்தன
நிறைமாத கற்பினியாய்
மென் நடை பழகி...
அந்த ஆடவன் அவன் ஆதவன்
கதிர் ஒளித்து..
கோள் பந்தை காதலாய்
கட்டி அனைத்தாள்..
இந்திரன் அடியோ.. பிரசவ வலியோ.. காதலின் உச்சமோ..
இடியென கதறினாள்... ஐயோ பாவம்

கருணை பார்வையாய்..
அனல் விழியை கொண்டு நோக்கினாள்..
மின்னல் ஒளியென.. ஒரு தாபம்

இதனை அழகோ இவளின் கண்கள் என்னும் முன்னே வலி கொல்லாமல் விழி நனைத்தால்
சிந்திய முதல் துளி..சின்னதாய் உருகிய பனித்துளி..

மேலும் ஒரு சவுக்கடி இடியென கதறினாள்.. இம்முறை
ஓவென அழுகிறாள்..
இதனை துன்பமோ இவளின் வாழ்க்கை எண்ணி கொண்டே தார் சாலைகள் பார்த்தேன்
அவள் கண்ணீரில் அவை உருகி கரைந்தே போய்விட்டன
காரை பூசிய தளங்களில் வடிய தெரியாமல்.. தேங்கி நின்றன அவள் கண்ணீர்.. மெல்ல தேங்கின வெள்ளம்..

இத்தனை நேரம் காதலும், கருணையும் கொண்டு ரசித்த எம் கண்கள் இப்பொது ஐயம் கொண்டு நிற்கின்றன..போதும் தாயே அளவாய் அழுதிடு... அடிக்கடி அழுதிடு..
ஒரேடியாய் ஒரு முறையாய் ஒரு ஆண்டிற்கே சேர்த்து அழுதிடாதே...

எனக்கு உன் வரண்ட தேகமும் வேண்டாம்.. வெள்ளம் என்னும் போர் கோலமும் வேண்டாம்..
அழகியாய்.. குமரியாய்.. ரதியாய்..
அளவாய் அணிந்திடு அழகாய் மிளிர்ந்திடு.. ஆடவர் உலகம் கவர்ந்திடு...

Wednesday, September 28, 2016

முதல் முத்தம்

வான் கொண்ட மேகமும் சற்றே நனைந்து போகும்..
உந்தன் கார்கூந்தல் கொண்ட சாரலில்...

அடி அண்ட கோளங்களும் சற்றே குழம்பிப் போகும்..
மயில் விழி கொண்ட உன் கண்களில்...

ஆதவன் கதிரும் அந்தம் குளிரும்..
உந்தன் நாசி உதிர்த்த ஜுவாலை மூச்சினில்...

உன் இதழோடு என்னை நீ இறுக்கி கொன்றாய்...
எந்தன் உயிரும் மெல்ல அதன் இடம் மாறியது..

இனி வெறும் கூடு தூக்கி வாழப்போகிறேன்..
அதனாலோ என்னவோ வெறுக்கிறேன் உன் முதல் முத்ததை...

ஆதி பிரியாமல் அண்டம் அதிராமல் கடலும் புரலாமல்..
இரு தேகம் மட்டும் உணர்ந்தது ஒரு மாய பிரளயத்தை...

கற்கள் உரசித்தான் தீப்பொறி பிறக்குமென விஞ்ஞானம் சென்னதடி...
உன் தேகமும் கற்சிலையென ஒரு கலக்கம் தோணுத்தடி..

பிறவி பலன் முழுதும் பெற்றேன் நம் முதல் முத்தத்தில்...
மறுப் பிறவியின் அர்த்தம் காட்டிட்டு ஒரு புது முத்தத்தில்...

Monday, September 19, 2016

பேருந்தே நிற்காதே!!

பேருந்தே நிற்காதே...
என்னவள் இறங்கிடுவாள்..
பேருந்தே நிற்காதே..
என்னவள் மறைந்திடுவாள்...

அவள் சூடிய முல்லைக்கு முன்பே
என் உள்ளம் வாடிடும்.. அதனால்.
பேருந்தே நிற்காதே...
அவள் கால் கொலுசு போல்
என் ஆண்மை  கதறிடும்.. அதனால்..
பேருந்தே நிற்காதே...

யுவதி அவள் சிரிப்பு என் ஆயுளை குடித்து முடிக்கும் அதுவரை..
பேருந்தே நிற்காதே..
குமரி இமை இரண்டும் என் ஜீவன் பார்த்தே தேயும் அதுவரை..
பேருந்தே நிற்காதே...

ஆடி செல்லும் உன்னை தன் நடை கொண்டு சாய்ப்பாள் .. அதற்காக..
பேருந்தே நிற்காதே..
சுடர் விழி வாங்கி பிறந்தவள் இவள் உன்னை பார்ப்பாள்.. அதற்க்காக..
பேருந்தே நிற்காதே...

பேருந்தே நிற்காதே
என்னவள் இறங்கிடுவாள்..
பேருந்தே நிற்காதே..
என்னவள் மறைத்திடுவாள்..

Monday, July 18, 2016

ஒரு தந்தையின் கதை

நான் பெற்ற அதிசயமே
எங்கள் கலவியின் ரகசியமே
என் கிறுக்கலில் முளைத்த ஓவியமே
என்னவள் சுமந்த காவியமே..

என் மகளே.. என் சேயே.. மறு தாயே..
இனி நிதம் உன் உச்சி முகர்ந்திடுவேன்
பொழுதும் என் மார்பில் சுமந்திடுவேன்
வாழ்வின் மொத்தம் உன் நலம் காண இசைந்திடுவேன்..

அப்பா என்று மழை கொஞ்சி அழைப்பாயோ..
எச்சில் நனைத்து கன்னத்தில் முத்தம் பதிப்பாயோ..
இல்லை அம்மா மகளாய் இருப்பாயோ..
அரை விரல் மடித்து என்னை சீண்டி பழிப்பாயோ..

சிறு மிட்டாயில் சிரிப்பாய் எனில்
கடல் உப்பையும் சக்கரையாய் மாற்றிடுவேன்
துளி அதட்டலில் கண் சிவப்பாய் எனில்
தமிழ் மொழியின் அகராதி திறுத்திடுவேன்

ராஜா இசையில் உன்னை கண் அமர்த்திடுவேன்..
Kindle பதிவிறக்கி கதைகள் பல படித்திடுவேன்..
Ipad'ல் தமிழ் எழுத சொல்லி பழக்கிடுவேன்..
பாரதி கண்ட யுவதியாய் உன்னை வளர்த்திடுவேன்..

நான் அழுகையில் உன் மடியில் அமர்த்தி
கண் துடைத்துவிடு.. மகளே உனக்கே நான்
மகனாய் மாறிடுவேன்....

Thursday, March 10, 2016

கேடு கொண்ட புகையே


அன்புள்ள புகையே...
நிதமும் உன்னை தின்றேன்..
தினமும் உன்னை கொன்றேன்...
உதட்டில் உன்னையும்..
நெஞ்சில் உன் கருவையும் சுமந்தேன்..
அரை அங்குல அற்புதம் என நினைத்தேன்..
துயரத்தில் மருந்தாய்..
தனிமையில் துணையாய்..
எண்ணினேன்..
நிலவில்லா இரவில் கூட
உன் துளி சுடர் கொண்டு வானம் பார்த்தேன்..
உனக்கு எதிரான வாசகங்களை
எண்ணி நிதம் நகைத்தேன்..

அன்று..
திரி இல்லா பட்டாசு நான் உன்னை என்னுல் ஏற்றி நானும் பற்றி கொண்டேன் ..

இன்று ..
சுவாச குழாய் வலிக்கிறது..
இதயம் கனக்கிறது..
உன்னில் பற்றிய நெருப்பு இன்று நுரையீரலில் சுடுகிறது..
நான் கண்டு நகைத்த வரிகள் இன்று என்னை கண்டு சிரிக்கிறது..
நிலவின் ஒளி பட்டு இன்று வானம் கூட கருக்கிறது..
நீயெ துயர விருந்தாய்..
தனிமை கொழுந்தாய்..
நிற்க்கிறாய்..
பட்டாசாய் வெடிக்கும் நிலையில் உணர்கிறேன்...
நிதம் நீயே என்னை கொன்றாய்..
நிதம் உணவாய் என்னை தின்றாய்...