Subu Mayura

My photo
Chennai, Tamilnadu, India
Balasubramanian Sakthivel

Monday, January 2, 2017

எம் தெய்வத்தின் மீது வழக்கு

உயிர் அமுதூட்டிய...
உயர்ந்த பசுவின் கண்ணீர் துடைத்திட தன் மகன் மேல் தேர்க்கால் உழுதிட்டான் எம் அரசன்....
பயிர் நெல் கூட்டிட...
கட்டைவிரல்  களத்தில் ஊன்றி
செந்நீர் நிலத்தில் உயர்வென
ஏர்க்கால் உழுதிட்டான் எம்
உழவன்...
அவன் புகழ் பாடிட என்றேனும்
நான் உன்னை வதைத்திட்டேனோ

ஊன் இளைத்து...
உயிர் உருக்கி...
கடன் எடுத்து...
மச்சு இறக்கி...
உன் தாய் சுமந்து போக உன்னை சுகம் என எண்ணி என் மார்சுமந்த 
நான் உன்னை வதைத்திட்டேனோ

தோல் மிளிர... விழி சுடர...
திமில் அதிர... நிலம் அலற...
என் வீட்டில் செல்லமாய்...
என் தெருவில் சொந்தமாய்...
என் ஊரில் தெய்வமாய்...
என் கீர்த்தி பாடிடும்..
என் புகழ் கன்றே என்றேனும்
நான் உன்னை வதைத்திட்டேனோ

ஏனைய பசுவின் காதலானாய்...
திமில் ஏறிய காவலனாய்...
உடன் பிறவா சகோதரனாய்..
வளர்ந்தும் என் மீது உரசும் எம் குழந்தையாய்... எத்தனை
மாற்றங்கள் சுமந்து என் முன் நின்றாய்... அடேய் நீயே சொல்..
நான் உன்னை வதைத்திட்டேனோ

என்னை தவிர எவனும் உன்னை
கட்டி அணைக்க இயலாது என
எண்ணியது தான் உன் வேதனையோ...
துள்ளி ஓடும் உன்னை எவனும்
தொட்டு விட முடியாது என எண்ணியது தான் உனக்கு
துன்பமோ...

உன்னுள்தான் உச்சிமுதல் பாதம் வரை எத்தனை தெய்வங்கள் என எம் சாஸ்திரம் சொன்னது....
அத்துணை தெய்வமும் கொள்ளட்டும் ஏம்மேல் கோபம்
உன் அகம் ஒரு புண் பட்டு இருந்தால்....

தாய் இழந்த எத்தனை சேய் தான்
உன் உதிரம் குடித்து வளர்ந்தது இந்த கோளத்தில்...
அத்துணை ஆடவனும் வாள் வீசட்டும் எம்மேல் உன்னை நான் தினம் வணங்க தவறி இருந்தால்...

மலட்டுபால் குடித்து என் சந்ததி நோய் கொண்டு வாழ...
எவன் அறுப்பான் என் குல தெய்வத்தின் கருவை...

இனி என் சந்ததி என்றுமே இல்லாது போகட்டும்... உன்னை தொலைத்து கண்ட கார்பரேட் கழிவுகளை குடிப்பதற்கு...

கலங்காதே என் கொஞ்சும் காளையா... எம் இறுதி மூச்சு கொண்டு உன் புகழ் கோனாது காத்திடுவேன்.. என்றும் என் அடையாளம் பேணாது பார்த்திடுவேன்....

No comments:

Post a Comment